நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசிய வார்த்தைகள், ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தி விட்டன.
“இவர் மாதிரி ஒரு வலிமையான ஹீரோ தமிழுக்கு கிடைத்திருக்குறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சீக்கிரம் வளர்ந்து வாங்க. 'ரமணா 2' பண்ணலாம். கேப்டனோட பெருமையை திருப்பி காட்டலாம்,” என்றார் முருகதாஸ். இந்த பேச்சு, ரமணா 2 விரைவில் தொடங்கும் எனும் ஊகங்களை கிளப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய முருகதாஸ், கேப்டன் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில் யானையுடன் நடித்திருந்தார். அப்போது ஒரு பேட்டியில் “யானை ஒரு குழந்தை மாதிரி, நானும் ஒரு யானை வாங்க போகிறேன் என்று கேப்டன் சொல்லினது ஞாபகம் வந்துச்சு,” எனவும் ஏஆர் முருகதாஸ் தெரிவித்தார்.
படைத்தலைவன் படத்தை இயக்கியவர் அன்பு. படத்தில் சண்முக பாண்டியனுடன் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், முனீஷ்காந்த், கருடன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்காக இசை தயாரித்துள்ளார்.
இப்போது ரசிகர்கள், ரமணா 2 நிச்சயமாக வரும், அதிலும் சண்முக பாண்டியன் நடிப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.