எளிதாக முடிந்திருக்க வேண்டிய பிரச்சினையை ஊதி பெரிதாக்கியது ஏன் என அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைசம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.
அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் எழுதியுள்ள இயக்குனர் பாரதிராஜா, அரசியல்வாதிகளிடம் கதை சொல்லிவிட்டுதான் படம் எடுக்க வேண்டுமா? படைப்பாளிகள் அரசியல்வாதிகளிடம் கதை சொல்ல காத்திருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக நேரடியாக ஒரு போன் கால் செய்து பேசி பிரச்சினையை தீர்த்திருக்கலாம். ஆனால் அதை எதிர்காற்றில் பற்றி எரியும் நெருப்பு துகளாக்கியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.