அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த டீசர் இதுவரை 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வணங்கான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அளித்துள்ள ஒரு நேர்காணலில் இயக்குனர் பாலா பற்றி சிலாகித்து பேசியுள்ளார். அதில் “வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேறினாலும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு பெரிதாக இல்லை. அந்த கதை சூர்யாவுக்கு பொருந்தாது என்பதால் இருவரும் பேசி பிரிந்தனர். அதே போல அர்ஜுன் ரெட்டி படத்தை அவர் ரீமேக் செய்ய ஒப்புக்கொண்டிருக்க கூடாது. ஏனென்றால் அது அவர் ஏரியா இல்லை. அவரின் ஸ்டைல் வேறு. வணங்கான் போன்ற படம்தான் அவருக்கு உகந்த கதை” எனக் கூறியுள்ளார்.