Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலகத்தலைவன் மேடையில் முகம் சுளிக்க வைத்த இயக்குனர் மிஷ்கினின் பேச்சு!

கலகத்தலைவன் மேடையில் முகம் சுளிக்க வைத்த இயக்குனர் மிஷ்கினின் பேச்சு!
, வெள்ளி, 11 நவம்பர் 2022 (09:07 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் கலகத்தலைவன் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

தடம் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குனர் மகிழ்திருமேனி இயகக்த்தில் உருவாகியுள்ள கலகத்தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து தயாரித்துள்ளார். மகிழ் திருமேனி வழக்கமாக ஆக்‌ஷன் கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் படங்களை உருவாக்குபவர். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான கலகத் தலைவன் படமும் இணையும் என்பதை டீசர் உறுதி செய்கிறது.

இதையடுத்து நேற்று இந்த படத்தின் ஆடியோ மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின் “இயக்குனர் மகிழ் திருமேனியின் ஒரு படத்தைக் கூட நான் பார்க்கவில்லை. ஆனால் அவரின் எல்லா படங்களையும் விட அவர் மேன்மையானவர்” எனக் கூறி பேசினார்.

மிஷ்கின் தான் கலந்துகொள்ளும் பல படங்களின் நிகழ்ச்சி மேடைகளில் இதுபோல மற்ற இயக்குனர்களை தொடர்ந்து முகம் சுளிக்க வைக்க விதமாக பேசி வருகிறார். மேலும் இதே மேடையில் இயக்குனர் ராஜேஷை குட்டி சுவராகப் போன இயக்குனர் என பேசியதும் விழாவுக்கு வந்த அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்சேதுபதி- பொன்ராம் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: மாஸ் போஸ்டர் இதோ!