Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் காலா பட தலைப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 25 மே 2017 (11:29 IST)
‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து ரஜினியும், பா.இரஞ்சித்தும் இணைந்துள்ள படத்துக்கு ‘காலா’ என தலைப்பு  வைக்கப்பட்டுள்ளது. காலா என்பது பிரதானமாக பெரிய எழுத்துக்களிலும், கரிகாலன் என்பதை அதற்கு அடியிலும் வரும்படி டிசைன் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 
இந்தியில் காலா என்பதற்கு ‘கருப்பு’ என்று அர்த்தம். அதாவது மும்பையில் வாழும் தமிழர்கள், தென்னிந்தியர்களை கருப்பர்கள் என்று குறிப்பிடும் வகையில் காலா எனக் குறிப்பிடுவார்கள். மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்று சொல்வதுண்டு. மேலும் காலா என்றால் எமன், அதாவது காலன் என்றும் அர்த்தம்.
 
கரிகாலன் என்று வருவதற்கு ரஜினியின் பெயர் கரிகாலன் என்று இருக்கலாம். கரிகாலன் என்பதைத்தான் காலா என்று அமைத்திருக்க வாய்ப்புண்டு. கரிகாலன் என்பது தமிழர் பெயர்தான். கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு  மன்னன் ஆவான். சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. ரஜினி நடித்த லிங்கா படத்தில் கரிகாலனின் பெருமையை  பற்றி பேசியிருப்பார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments