தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அரசுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிகாலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு திரையிட தமிழக அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைக்கலாம் என்றும் அந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், புதுச்சேரியில் லியோ திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.