சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிக்கும் டான் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோயம்புத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்க உள்ளதாம்.
சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார், அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு டான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை இணையத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் பெரும்பாலான பகுதிகள் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்க உள்ளதாம். கோயம்புத்தூரில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரி ஒன்றில் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.