‘எம்புரான்’ திரைப்படத்தின் டைட்டிலில், பாஜக எம்.பி. மற்றும் நடிகருமான சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், பாஜகவினர் மற்றும் வலதுசாரிகள் இந்த படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் கலவரம் குறித்த காட்சி, இஸ்லாமிய பெண்கள் தாக்கப்படும் காட்சிகள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை வில்லனாக காட்டிய வசனங்கள் ஆகியவற்றை படக்குழு தற்போது மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ‘எம்புரான்’ திரைப்படத்தில் 17 இடங்களில் கட் செய்யப்பட்டு, சுமார் 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், சில காட்சிகளை "சில ஆண்டுகளுக்கு முன்" என்று மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகரும் பாஜக எம்.பி-யுமான சுரேஷ் கோபிக்கு படத்தின் டைட்டிலில் தெரிவித்த நன்றியும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு எதிராக பாஜகவினர் போராடி வரும் நிலையில், இந்த மாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.