Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 24 May 2025
webdunia

எதிர்நீச்சல் சீரியலில் திடீர் ட்விஸ்ட்… எண்ட்ரியாகும் ஆதிபகவன்.. யார் இவர்?

Advertiesment
எதிர்நீச்சல்
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (15:17 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 500 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த சீரியலின் இமாலய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அதில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் அட்டகாசமான நடிப்புதான். அவர் சமீபத்தில் மறைந்ததை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என கேள்வி எழுந்தது.

ஆனால் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் ஆதி குணசேகரன் கேரக்டர் லெட்டர் எழுதி வைத்துவிட்டு கண்காணாத இடத்திற்கு சென்று விட்டதாக கதை மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆதி குணசேகரனுக்கு முன்பே ஆதிபகவன் என்ற மகன் விசாலாட்சிக்கு இருந்ததாக கதையை திசை திருப்பியுள்ளனர். இதன் மூலம் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து புதிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி கதையை எடுத்து செல்ல உள்ளதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!