Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹத் பாசில் நடிப்பில் ரோமான்ச்சம் இயக்குனரின் ‘ஆவேஷம்’ டீசர் ரிலீஸ்!

vinoth
வியாழன், 25 ஜனவரி 2024 (07:03 IST)
கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி அப்படி ஒரு வெற்றியைப் பெற்றது மலையாளத் திரைப்படமான ரோமாஞ்சம் என்ற திரைப்படம். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படமாக குறுகிய லொகேஷன்களில் படமாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 54 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. சுமார் 3 கோடி ரூபாயில் உருவான இந்த திரைப்படம் இந்த ஆண்டில் மலையாள சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கும் ஆவேஷம் படத்தில் நடித்துள்ளார் பஹத் பாசில். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நடந்து முடிந்துள்ள சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலிஸாகி கவனம் ஈர்த்தது.

இந்த படத்தின் கலகலப்பான டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. காமெடி ரௌடியாக பஹத் பாசில் இதில் நடித்துள்ளார். அவரை வைத்து சமீபத்தைய கமர்ஷியல் படங்களை ட்ரோல் செய்வது போல் வசனங்களும் காட்சிகளும் அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments