Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஐந்து ஆண்டுகள் நம்முடையது… மலையாள சினிமா குறித்து பஹத் பாசில்!

vinoth
புதன், 24 ஏப்ரல் 2024 (07:06 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் ஆவேஷம் படம் தொடர்பாக அளித்த ஒரு நேர்காணலில் பேசிய பஹத் பாசில் “மலையாள சினிமா கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. திரையரங்கின் மூலமான வருவாய் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் ஓடிடியில் இன்னும் மலையாள சினிமா அழுத்தமாக கால்பதிக்கவில்லை. மற்ற மொழி படங்கள் எல்லாம் ஷூட்டிங்குக்கு முன்பே பிஸ்னஸ் செய்யப்படுகின்றன.

மலையாள சினிமா உலகினருக்கு நான் சொல்வதெல்லாம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ அதையெல்லாம் செய்துவிட வேண்டும். அதற்கான காலம் இதுதான். 100 கோடி வசூல் என்று ஓடாமல் அர்த்தமுள்ள படங்களை உருவாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

மீண்டும் இணைகிறதா சிறுத்தை சிவா & கார்த்தி கூட்டணி?

அடுத்த கட்டுரையில்
Show comments