தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான தங்கர்பச்சான் வட சென்னை மக்களை பற்றிய சினிமா பார்வை குறித்து விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், அழகி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் தங்கர் பச்சான். இப்படத்தை அடுத்து, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு,அம்மாவின் கைபேசி, களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தை அடுத்து, தன் மகனை வைத்து டக்கு மக்கு டக்கு தாளம் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவில், வட சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காண்பிக்கப்படும் மக்கள் பற்றி தவறாக சித்தரிப்பதாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வட சென்னை முழுவதும் சுற்றினேன். அங்கு சினிமாவில் காண்பிக்கப்படும் அழுக்கு சிக்கு விழுந்த பரட்டைத்தலை நீண்ட நாடி உடைய போக்கிலி போன்ற தோற்றம் கொண்டவர் போல் என் கண்களில் படவில்லை. வட சென்னை கொலையாளிகளாகவும், திருடர்களாகவும் போதைப் பொருள் கடத்துபவர்களாகவும் காண்பிக்கப்படுவது இன்னும் எவ்வளவு காலம்தான் தொடரும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.