Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 5 June 2025
webdunia

சூரரைப் போற்று இந்தி ரீமேக் பாலிவுட்டை அதிரவைக்கும்.. ஜி வி பிரகாஷ் டிவீட்!

Advertiesment
சூர்யா
, வியாழன், 6 ஜூலை 2023 (08:45 IST)
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில மாதங்கள் தடைபட்டது. இந்நிலையில் இப்போது படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் மோகன் பாபு நடித்த வேடத்தில் அவர் நடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இயக்குனர் சுதா கொங்கராவின் பிறந்தநாளை முன்னிட்டு டிவீட் செய்த ஜி வி பிரகாஷ் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுதா கொங்கரா. நீங்கள் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் செய்துள்ள மேஜிக்கை இந்த உலகம் பார்க்க ஆவலாக உள்ளேன். அந்த படம் பாலிவுட் சினிமாவை அதிர வைக்க போகிறது. அதன் பிறகு நீங்கள் தமிழில் இயக்கப் போகும் படம் நெருப்பாய் இருக்கும்” என எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் வினோத் படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?