விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் விஷால் 34 என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
தாமரபரணி, பூஜை ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக விஷால் - ஹரி கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேபோல் தேவிஸ்ரீ பிரசாத் மீண்டும் ஹரி படத்தில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் கௌதம் மேனன் மற்றும் சமுத்திரகனி ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மேலும் கெளதம் மேனன் சமுத்திரகனி ஹரியுடன் இணைந்து விஷால் எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
விஷால் 34 படத்தில் விஷால் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.