இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் பணப்பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் மேனன். இப்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரம்முடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பல வருடங்களாக இந்த படம் முடியாமல் இருப்பதற்குக் காரணம் இயக்குனர் கௌதம் மேனன்தானாம். இதனால் அவர் மேல் விக்ரம் கோபமாக உள்ளதால் இந்த படத்தைக் கைவிட்டு அவர் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்யவேண்டும் என்ற முயற்சியில் கௌதம் மேனன் இப்போது இறங்கியுள்ளார். இதனால் விக்ரம்மிடம் கடைசியாக ஒரு 5 நாள் மட்டும் தேதி கேட்டாராம்.
அதற்கு பதிலளித்த விக்ரம் இதுவரை எடுத்தக் காட்சிகளை எடிட் செய்து எனக்குக் காட்டுங்கள். மேலும் படத்தின் க்ளைமேக்ஸ் என்ன என்பதை என்னிடம் தெளிவாகக் கூறுங்கள். அப்படி இதை இரண்டையும் செய்தால் நான் தேதிகள் கொடுப்பது குறித்து முடிவெடுக்கிறேன் எனக் கூறியுள்ளாராம். இதைக் கேட்ட கௌதம் மேனன் மறுபடியும் சைலண்ட் ஆகிவிட்டாராம்.