இயக்குனர் ரஞ்சித் காலாவுக்குப் பிறகு தனது அடுத்த படத்தை பிரம்மாண்டமான வரலாற்றுப் படமாக இந்தியில் இயக்க இருக்கிறார்.
ரஞ்சித் காலா படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் இருக்கும்போதே இந்தியின் முக்கியத் தயாரிப்பாளர்களில் ஒருவரான நமா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்னணி கொண்ட படத்தை இயக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியானது. அதையடுத்து அதிகாரப்பூர்வமற்ற பல தகவலகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் நேற்று அந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது நமா புரொடக்ஷன்ஸ். அதில் படத்தின் தலைப்பு பிர்சா முண்டா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிர்சா முண்டா என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய போராளி ஆவர். அவரது வாழ்க்கை வரலாறையையே தற்போது ரஞ்சித் படமாக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களும் பாராடுகளும் குவிந்து வருகின்றன. ரஞ்சித் படமாக எடுக்கும் பழங்குடியினப் போராளியான பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை மற்றொரு தமிழ் இயக்குனரும் தமிழில் படமாக்க இருக்கிறார். அறம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்ற இயக்குனர் கோபி நயினார் தற்போது ஜெய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் பிர்ஸா முண்டா படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார் என்று தகவல்கள் பரவிவருகின்றன