Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2018 - ல் நடந்த நட்சத்திரங்களின் பிரம்மாண்ட திருமணங்கள்!

Advertiesment
grand Weddings
, வெள்ளி, 28 டிசம்பர் 2018 (14:38 IST)
இந்த வருடத்தில் பிரமாண்டமாக நடந்த நட்சத்திரங்களின் திருமண லிஸ்ட் இதோ!


 
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் :-
 
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது அசத்தலான நடிப்புக்காக ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர். அதோடு இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும் திகழ்பவர். தன்னுடன் ராம் லீலா, பஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்களில் இணைந்து நடித்த நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கொங்கனி மற்றும் சிந்தி முறைப்படி இவர்களது திருமணம் 14 நவம்பர் 2018 அன்று இத்தாலியில் பிரமாண்டமாக நடந்தது.
 
grand Weddings


 
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் :- 
 
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஹாலிவுட் திரையுலகிலும் கால் பதித்த அவர், தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். 
 
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த காதல் ஜோடிக்கு 1 டிசம்பர் 2018 அன்று ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படி ஆடம்பரமாக இந்த திருமணம் நடந்தேறியது.  

grand Weddings

 
இஷா அம்பானி – ஆனந்த் :- 
 
இந்தியாவில் உள்ள நெம்பர் ஒன் கோடிஸ்வரர் முகேஷ் அம்பானி. இந்த பெயர் உலகில் பரவலாக அறியப்பட்டதுதான். அவரது வானம் தொடும் அண்டிலா வீட்டுக்கு வாயப்பொளக்காதவர்களே இல்லை எனலாம்.
 
இவரது மகள் இஷா அம்பானிக்கு 12 டிசம்பர் 2018 ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடந்தது . உலகில் இதுவரை யாரும் செலவு செய்யாத அளவவில்  பல கோடிகள் செலவழித்து தன் செல்ல மகளின் திருமணத்தை நடத்தினார் அம்பானி .  உலகில் உள்ள பிரபலமானவர்களை இந்த திருமணத்திற்கு அழைத்து  ரூ.450 கோடிகளுக்கு புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்துள்ளார் முகேஷ் அம்பானி . 

grand Weddings

 
சாய்னா நேவால் -பாருப்பள்ளி காஷ்யப் :-
 
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். அதேபோல் சிறந்த வீரர் பாருபள்ளி காஷ்யப். இருவரும் காதலித்து வருவதாகவும், திருணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. பிறகு கடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான் என்று சாய்னா தெரிவித்தார்.
 
அடுத்து சாய்னா - காஷ்யப் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விளையாட்டு, அரசியல், மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்க பிரமாண்டமாக ஹைதராபாத் நகரில், டிசம்பர் 16 அன்று நடைபெற்றது. 


grand Weddings

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018- ல் அதிக படங்களில் நடித்த ஹீரோ யாருன்னு பார்த்தீங்களா..!