Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி.பிரகாஷின் மேல்முறையீட்டு மனு- வருமான வரித்துரைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (21:57 IST)
இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ்குமார் அவரது படைப்புகளுக்கு  சேவை  வரி செலுத்த வேண்டுமென வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து ஜிவி.பிரகாஷ்குமார் மேல்முறை மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு குறித்து நான்கு வாரங்களில் வருமான  வரித்துறை பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி  இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ்குமார் தற்போது, பிரபல இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருவதுடன், இசையமைத்தும் வருகிறார்.

சமீபத்தில், ஜிவி.பிரகாஷ்குமார் அவரது படைப்புகளுக்கு ரூ.1 கோடியே 84 லட்சம்
சேவை வரி செலுத்தத வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த  நோட்டீஸை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜிவி.பிராகஷ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த  நான்கு வாரங்களில் பதிலளிக்க  வேண்டுமென்று ஜிவி.பிரகாஷ்குமாருக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் ஜிவி.பிரகாஷ். அதில், 'காப்புரிமைக்கு தயாரிப்பாளர்கள் உரிமையாளர்கள் ஆகிவிடுவதால் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டத்திற்குப் புறம்பானது' என்று கூறியயிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 'ஜிவி.பிரகாஷ்குமாரின் மனு பற்றி 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென' வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

அடுத்த கட்டுரையில்
Show comments