ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க இருந்தார்.
ஆனால் இப்போது ஹெச் வினோத் அடுத்து கமல் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் கமல்ஹாசனின் 233 ஆவது படமாக உருவாக உள்ளது.
ஆனால் இந்த படத்துக்கு முன்பாகவே வினோத், தனுஷ் நடிப்பில் ஒரு குறுகிய கால படம் ஒன்றை இயக்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை லலித் குமார் தயாரிக்க உள்ளதாக தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.