தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹெச் வினோத், அதன் பின்னர் தீரன், வலிமை, துணிவு என அடுத்தடுத்து மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார்.
கமல்ஹாசனோடு ஒரு படம் பண்ண ஒப்பந்தம் ஆன, சில காரணங்களால் அந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டது. இப்போது அவர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். இதுதான் விஜய்யின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜனநாயகன் படத்தை முடித்ததும் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது திடீரென்று அவர் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்துக் கதையை சொன்னதாகவும், இந்த படத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.