Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2025 ஆம் ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா கமல் & ஹெச்.வினோத் திரைப்படம்?

2025 ஆம் ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா கமல் & ஹெச்.வினோத் திரைப்படம்?
, வியாழன், 30 நவம்பர் 2023 (07:43 IST)
நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை முடித்துள்ள கமல் அடுத்து கல்கி 2898 படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கும் படத்துக்காக சில பயிற்சிகளை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார் என சொல்லப்பட்டது. அந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதால் இந்த படம் தொடங்குவதில் இன்னும் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே கமல்ஹாசன் முதலில் மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு கமல் ஹெச் வினோத் படத்தை தொடங்க 2025 ஆம் ஆண்டு ஆகிவிடக் கூடும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் பிரச்சனைகள்.. கண்டுகொள்ளாத விக்ரம்!