Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் பட வேலைகளைத் தொடங்கிய இயக்குனர் வினோத்!

கமல் பட வேலைகளைத் தொடங்கிய இயக்குனர் வினோத்!
, சனி, 11 பிப்ரவரி 2023 (08:57 IST)
இயக்குனர் வினோத் அடுத்து கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதே போல தனுஷ் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்க உள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் தொடங்குவார் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது வினோத், கமல் படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக வினோத்துக்கு தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் ஒரு சொகுசு காரை வாங்கித் தந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டரில் சோபிக்காத ரன் பேபி ரன்… ஆனாலும் செம்ம கல்லா கட்டிய தயாரிப்பு நிறுவனம்!