இயக்குனர் ஹரிக்கு கடைசியாக அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் ரிலீஸாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்தபடத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது முடிந்துள்ள நிலையில் ஜூலை மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதற்குள் விஷால் மார்க் ஆண்டனி படத்தை முடித்துவிட்டு வருவார் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹரி இயகிய யானை படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.