Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலீஸுக்கு முன்பே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங்!

ரிலீஸுக்கு முன்பே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங்!
, புதன், 29 நவம்பர் 2023 (09:48 IST)
நடிகர் ஹரிஷ் கல்யாண் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. 

இப்போது அவர் டீசல், நூறு கோடி வானவில், பார்க்கிங் என ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் இப்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில் இப்போது படத்தைப் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டியுள்ளனர். படம் பார்த்த பலரும் சமூகவலைதளங்களில் படத்தைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எம் எஸ் பாஸ்கரின் நடிப்பை சிலாகித்து பதிவுகள் அதிகளவில் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வாரம் ரிலீஸாகும் படங்களில் ‘பார்க்கிங்’ ரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குய்கோ படத்தை அதன் தயாரிப்பாளர்களே ப்ரீசர் பாக்ஸில் வைத்து விட்டார்கள்… இயக்குனர் புலம்பல்!