கமல்ஹாசன் - உதய நிதி இணையவுள்ள புதிய படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. விநியோகம் பற்றிய வசூல் நிலவரத்தையும், கணக்கை சரியாக காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக எதிர்பார்ப்புகள் எழுந்தது.
இதை உறுதிப்படுத்தும் விதமான இன்று கமல்ஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
கமல் - உதய நிதி இணையும், ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குநர்கள் உள்ளிட்ட தகவல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்த நிலையில், இப்படத்தை சசிக்குமாரின் கிடாரி படத்தை இயக்கிய பிரசாந்த் முருகன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
விரைவில் இப்பட ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.