Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

விபத்தில் காயமடைந்த விக்ரம் இப்போது எப்படி இருக்கிறார்?... எப்போது மீண்டும் ஷூட்டிங்கில்?

விபத்தில் காயமடைந்த விக்ரம் இப்போது எப்படி இருக்கிறார்?... எப்போது மீண்டும் ஷூட்டிங்கில்?
, ஞாயிறு, 7 மே 2023 (09:11 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தங்கலான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலான் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்ட போது திடீரென விலாப்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரின் காயம் நல்வாய்ப்பாக பெரிதாக இல்லை என்றும் சில வாரங்கள் ஓய்வுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார் என்றும் இன்னும் 18 நாட்கள் மட்டுமே படத்தின் ஷூட்டிங்கில் மீதமுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“மதம் சார்ந்து அல்ல மனம்சார்ந்து படம் எடுத்துள்ளேன்”… ஃபர்ஹானா படத்தின் இயக்குனர் நெல்சன் கருத்து!