Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் : ஸ்ரீரெட்டி லீக்ஸில் அடுத்து யார்?

Advertiesment
Sri reddy
, வெள்ளி, 13 ஜூலை 2018 (12:27 IST)
தமிழ் சினிமா பிரபலங்களின் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறி வரும் பாலியல் புகார்கள் தமிழ் சினிமா உலகினரை பெரும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

 
சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு பட உலகில் வாய்ப்பு தருவதாக கூறி வாய்ப்பு தேடும் நடிகைகளை இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படுக்கைக்கு பயன்படுத்தினர் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிர வைத்தார். தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இவரது புகாரில் தெலுங்கு நடிகர் ஞானி உட்பட பல இயக்குனர்கள் சிக்கினர்.
 
இந்நிலையில், என் வாழ்க்கையின் ரகசியங்களை வெளியிட்ட போது எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும், எனக்காக அனுதாபம் காட்டியவர்களுக்கும் நன்றி. இது தமிழ் சினிமாவிற்கான நேரம் எனக்கூறி அவரின் புகார்களை கோடம்பாக்கம் பக்கம் திருப்பினார்.
Sri reddy

 
அவரது புகாரில் முதலில் சிக்கியவர் இயக்குனர் முருகதாஸ். முகநூல் பக்கத்தில்“ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ். உங்களுக்கு கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கிறதா? தெலுங்கு இயக்குனர் வெளிகொண்டா சீனிவாஸ் மூலமாக நாம் சந்தித்தோம். எனக்கு நல்ல கதாபாத்திரம் ஒன்றை கொடுப்பதாக வாக்களித்தீர்கள். நமக்குள் பலமுறை ........... நடந்தது. ஆனால், தற்போது வரை எனக்கு எந்த வாய்ப்பையும் நீங்கள் கொடுக்கவில்லை. நீங்களும் சிறந்த மனிதர்தான்” என பதிவிட்டுள்ளார். 
 
இதுவரை எந்த புகாரிலும் சிக்காமல் இருந்த இயக்குனர் முருகதாஸ் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியிருப்பது தமிழ் சினிமா உலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
Sri reddy

 
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், ரோஜாக் கூட்டம் படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் தன்னை பயன்படுத்திக்கொண்டதாக அடுத்த குண்டை வீசினார். 5 வருடங்களுக்கு முன்பு சினிமா நட்சத்திரங்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிக்காக ஹைதராபாத் வந்த போது பார்க் ஹோட்டலில் உங்களை சந்தித்தேன். அப்போது, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக் கொண்டீர்கள். ஞாபகமிருக்கிறதா?” என பதிவிட்டு பீதியை கிளப்பினார்.
 
இப்படி தமிழ் சினிமா பிரபலங்களின் மீது பாலியல் புகார் கூறுகிறாரே என அதிர்ச்சியில் இருக்கும் போது நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகாரை கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.. 
 
தனது முகநூலில் “ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது.  
Sri reddy

 
என் உடலின் வயிற்றுப்பகுதியை உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை” என பதிவிட்டுள்ளார். 
 
முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  அதேநேரம், ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் குறித்து இதுவரை முருகதாஸோ, ஸ்ரீகாந்தோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ராகவா லாரன்ஸ் விளக்கம் கொடுப்பாரா எனத் தெரியவில்லை.
 
எப்படி இருந்தாலும், இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸில் சிக்கப் போகிறார்கள் என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீரியல் நடிகைகளுக்கு வலை விரித்த விபச்சார புரோக்கர் - சாதுரியமாக சிக்க வைத்த நடிகை