Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன் - ஈஷா தியோல் குறும்பு!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (15:47 IST)
பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது. 
 
குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர்களின் உடல் எடை மற்றும் சரும பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேட்டிக் தொழில்நுட்பமும் அவர்களது கைலான் சருமம் மற்றும் கூந்தலுக்கான தயாரிப்புகளும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. 
 
அந்தவகையில் தற்போது நடிகை ஈஷா தியோல் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 17 கிலோ வரை குறைத்துள்ளார். சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல் இது குறித்து பேசிய அவர், 
 
“அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இருப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பம் வந்துவிட்டது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எல்லோருக்கும் ஏற்படுவது போல, எனக்கும் உடல் எடை அதிகரிக்கவே செய்தது.
 
எனது நண்பர்கள் வட்டாரத்தில் கிரையோமேடிக், தொழில்நுட்பத்தில் எடை குறைப்பது குறித்து விசாரித்தபோது தான், இங்கே கலர்ஸ் நிறுவனம் குறித்து தெரியவந்தது. அதன்பிறகுதான் இந்த சிகிச்சை முறைக்குள் அடி எடுத்து வைத்தேன். அது மிகப்பெரிய பலனை தந்ததுடன் நல்ல அனுபவமாகவும் இருந்தது. எடை குறைவது கண்கூடாகவே தெரிந்தது.
 
அதேபோலத்தான் படப்பிடிப்பு, மேடை நிகழ்ச்சிகள், வெளியூர் பயணங்கள் என சுற்றிக்கொண்டே இருக்கும்போது, எனது சருமத்தை பராமரிப்பதும் கூந்தல் உதிர்வதை தவிர்ப்பதும் பெரிய சவாலாக இருந்தது. அப்போதுதான் கைலான் தயாரிப்புகள் பற்றி தெரியவந்தது. 
 
அவற்றில் நமக்கு தேவையான இயற்கையான மூலப்பொருட்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல, ரசாயன பொருட்களோ அல்லது விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்களோ அதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எனக்கு அவற்றை பயன்படுத்துவதற்கு வசதியாக இருந்தது” என்றார்.
 
மேலும் பத்திரியாக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஈஷா தியோல், “சென்னை எப்போதுமே என் சொந்த ஊர்.. நான் சிறுவயதில் விடுமுறைக்காக இங்கேயே என் தாத்தா அப்பாடி வீட்டில் வந்து தங்கி செல்வதைப்போல, இப்போது எனது குழந்தைகளையும் விடுமுறை என்றால் சென்னைக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சென்னை வந்தாலே நல்ல ‘ரசம்’. சாப்பிடுவதற்கு கிடைக்கிறது ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆய்த எழுத்து’ படத்தில் நடித்துள்ளேன். அதுபோன்று நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், மீண்டும் தமிழில் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.. 
 
குழந்தைகளை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருப்பதால், அடிக்கடி தமிழ் படங்கள் பார்க்க முடிவதில்லை. அதேசமயம் நல்ல படங்கள் என நண்பர்கள் மூலமாக தெரிய வரும்போது, அந்தப் படங்களைத் தவறாமல் பார்த்து விடுவேன். குறிப்பாக சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன்.. நான் சூர்யாவின் ரசிகையின் கூட.. அதேபோல தென்னிந்திய நடிகைகளில் தமன்னாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
 
திருமணம் ஆகி விட்டாலே, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போது, திருமணமான பெண்கள் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். ஓடிடி தளங்கள் வேறு உருவாகி விட்டன. நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதற்கு தடை இல்லை” என்றார் ஈஷா தி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments