Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜா இசை நிகழ்ச்சி… மாற்று திறனாளிகளுக்கு இலவச டிக்கெட்!

Advertiesment
Ilaiyaraajaa

vinoth

, வியாழன், 3 ஏப்ரல் 2025 (08:38 IST)
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி உள்ளதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’Valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. பல அரசியல் தலைவர்கள் நேரை சந்தித்து வாழ்த்தினர். மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார். இதையடுத்து அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் அடுத்தடுத்து தமிழகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் மே 1 ஆம் தேதி கரூரில் அவருடைய இசை நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்குபெற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 கெட்டப்களில் அதகளம்… கேங்கர்ஸ் படத்தில் வைகைப்புயலின் ரி எண்ட்ரி!