தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் இளையராஜா. இசையைத் தவிர, பாடல்கள் எழுதுவது, பாடுவது, திருவாசகம் மற்றும் சிம்பொனி என அவருடைய பணிகள் எல்லாமே இசைத்துறை சார்ந்தே அமைந்தன. இந்நிலையில் இளையராஜா ரஜினி நடித்த ஒரு படத்தை இயக்க விரும்பியதாக ஒரு சுவாரஸ்ய தகவல் பெரிய அளவில் யாரும் அறியாதது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் ராதா மற்றும் நதியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ரஜினிகாந்த் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கருக்காக நடிக்க ஒத்துக்கொண்டார். முதலில் இந்த படத்துக்கு பொருத்தமான இயக்குனர் அமையவில்லையாம். அதனால் இந்த படத்தை இளையராஜா தானே இயக்குவதாக சொல்லி ராஜாதி ராஜா என தலைப்பையும் அவர்தான் சொன்னாராம். ஆனால் பின்னர் என்ன காரணத்தினாலோ அதை இயக்க முடியாமல் போனது. இதை இளையராஜாவே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த படத்தை இளையாராஜா இயக்கி இருந்தால் அவரின் இயக்குனர் திறமையும் வெளிப்பட்டு இருக்கும்.