Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் கருத்துக்கு இளையராஜா மறுப்பு

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (08:39 IST)
நேற்று இரண்டாவது நாளாக நடந்த 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், "இளையராஜாவின் திறமை கடவுளின் ஆசீர்வாதம், இளையராஜா. இசையின் சுயம்பு லிங்கமாக இருக்கிறார் இளையராஜா. அந்த சக்தி ‘அன்னக்கிளி’ மூலம் அறிமுகமாகி இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது
 

 
ரமண மகரிஷியை எனக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். ஒரு நாள் அவரை காணும்போது எனக்கு சாமி என்று அழைக்க தோன்றியது. அன்று முதல் நான் அவரை சாமி என்று அழைப்பேன். அதேபோல் அவரும் என்னை சாமி என்று தான் அழைப்பார்.
 
70, 80களில் பண்டிகை நாட்களில் 12 படங்கள் வெளியாகும். அதில் 10 படங்கள் இளையராஜா இசையில் தான் வெளியாகும். ஒரே நாளில் தூக்கமில்லாமல் மூன்று படங்களுக்கு ரீரெக்கார்டிங் செய்திருக்கிறார். அவர் ரீரெக்கார்டிங் செய்தாலே படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் இசையமைத்து வெற்றி பெற்ற படங்கள் எத்தனையோ உள்ளன. பல தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமலே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
 
என்னுடைய படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நன்றாக இசையமைத்துள்ளார் என ரஜினிகாந்த் கூறினார். இந்த  கருத்தை மறுத்த இளையராஜா, என்னை பொறுத்தவரை இசை தான் பிரதானம். அப்படி பார்த்தால் ராமராஜன் படங்களுக்கு அதைவிட நன்றாக இசையமைத்துள்ளேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments