இந்தியாவின் விளம்பர உலகில் மக்களின் அதிக நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் பட்டியலை TIARA ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் விளம்பர உலகில் மக்களின் அதிக நம்பிக்கைக்குரிய ஆண்களின் பட்டியலில் அமிதாப் பச்சன் 88 %ஓட்டுகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். பெண்களில் தீபிகா படுகோனே முதலிடம் பிடித்துள்ளார்.
பாலிவுட் நடிகர்களின் அதிக நம்பிக்கை நட்சத்திரங்களின் பட்டியலில் அக்ஷய்குமார் 86.6 %ஓட்டுகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
பாலிவுட் நடிகைகளின் அதிக நம்பிக்கை நட்சத்திரங்களின் பட்டியலில் அதீபிகா படுகோனே 82.9 % ஓட்டுகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் அதிக நம்பிக்கைக்குரிய நட்சத்திர ஜோடிகளின் பட்டியலில் விராட்கோலி – அனுஷ்கா சர்மா முதலிடம் பிடித்துள்ளனர்.