கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், எதிர்பார்ப்புகளுக்கு மததியில் கடந்த ஆண்டு ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.
மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது. இதனால் அந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ஷங்கர் மறுத்தார்.
இந்நிலையில் இதுவரை எடுத்து எடிட் செய்யப்பட்ட இந்தியன் 3 படக் காட்சிகளை கமல்ஹாசன் சமீபத்தில் பார்த்துள்ளார். அதேபோல அந்தக் காட்சிகளை சுபாஷ்கரன் பார்ப்பதற்காக லண்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர் பார்த்து முடித்ததும் மீண்டும் ஷூட்டிங் தொடங்குவது சம்மந்தமான அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.