உலக அளவில் ஓடிடி தளத்தின் மதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. அத்துடன் இன்று முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்களே நெட் பிளிக்ஸில் திரைபடங்கள் இயக்கி வெளியிடுகின்றனர். அதனால் கொரோனா காலத்தில் தியேட்டர் செல்ல முடியாத மக்களுக்கு இது நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது.
இந்நிலையில் அதிக எண்ணிக்கையில் நெட் பிளிக்ஸை பயனாளர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
எனவே தனது பயனாளர்களுக்கு வார இறுதியில் இலவச சேவையைத் தர நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்தச் சேவை இந்தியாவில் இருந்து ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தின் புதிய பயனாளர்களின் signup -ஐ அதிகரிக்கவும் அவர்களுக்கு புதிய அனிபவத்தை தரும் வகையிலும் இதில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்,.
ஏற்கனவே அமெரிக்க நாட்டை தவிர இந்தியா போன்ற நாடுகளில் 30 நாட்கள் இலவச சேவையை நெட்பிளிக்ஸ் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.