பிக்பாஸ் வீட்டில் கம்ருதீனுடன் நட்பாக இருந்து வந்த விஜே பாரு, தற்போது கம்ருதீன் குறித்தே தவறாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதலாகவே ஹவுஸ்மேட்ஸ் அனைவரோடும் சண்டை போடும் பாருவுக்கு ஆதரவாக இருந்து வந்தது வாட்டர்மெலன் திவாகர் மட்டுமே. கடந்த வாரம் ஜூஸ் டாஸ்க்கில் திவாகருடன் பாரு சண்டை போட்ட நிலையில், இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர். அப்போது கம்ருதீன் பாருவுக்கு நெருக்கமாகிவிட்டார்.
பாருவுக்கு யாருடனாவது ஏதாவது பிரச்சினை என்றால் உடனே கம்ருதீன் உள்ளே புகுந்து அவர்களிடன் சண்டை போடுகிறார் என ஹவுஸ்மேட்ஸே குறை சொன்னார்கள். இருவரும் சேர்ந்து கேமரா முன்னால் டான்ஸ் ஆடுவதுடன், ஒன்றாக சிறைக்கு சென்று அமர்ந்துக் கொண்டு கதையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று மீண்டும் வாட்டர்மெலன் திவாகரிடம் பாரு பேசியபோது, வாட்டர்மெலனும் பழசை மறந்து கேஷுவலாக பாருவிடம் பேசினார். கம்ருதீன் இந்த வாரம் கனி கேங்குடன் கொஞ்சம் நெருக்கமாக தொடங்கிவிட்டது பாருவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது,
இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கம்ரு குறித்து வாட்டர்மெலனிடம் பேசிய பாரு, கம்ரு பல இடங்களில் தன்னிடம் அத்துமீறி நடந்துக் கொள்ள முயல்வதாக குற்றம் சாட்டி பேசியது ஆடியன்ஸை ஷாக் ஆக்கியுள்ளது. கம்ருவை ஏற்கனவே வாட்டர்மெலனுக்கு பிடிக்காது என்பதால் அவரும் கம்ருவை திட்டி பேசுகிறார்.
ஆனால் இதே பாரு கொஞ்ச நாள் முன்னதாக சாப்பிடும்போது சாப்பாட்டை பற்றி பேசுவது போலவே 18+ விஷயங்களை கம்ருதீனிடம் பேசியது சமூக வலைதளங்களில் பரவி விமர்சனத்திற்குள்ளானது. இது எங்கே போய் முடியப்போகிறதோ என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K
#Day23 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 28, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/4r0jFul9Pc