Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சூதுகவ்வும் பார்ட் 2 வா? இயக்குனர் நலன் தரப்பு பதில்!

சூதுகவ்வும் பார்ட் 2 வா? இயக்குனர் நலன் தரப்பு பதில்!
, சனி, 18 ஏப்ரல் 2020 (15:53 IST)
தமிழ் சினிமாவில் பிளாக் காமெடி பட வகைகளில் முக்கியமானப் படமாக இருந்து வரும் சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதாக வெளியான செய்தியை இயக்குனர் நலன் குமாரசாமி தரப்பு மறுத்துள்ளது.

பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த விஜய் சேதுபதியை ஹீரோவாக மாற்றியப் படம் சூதுகவ்வும். தமிழில் பிளாக் காமடி வகைப் படங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது அந்தப் படம்.

சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்துபோகும் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகியது. அதன் பின் எந்த படமும் இயக்காமல் இருக்கும் நலன் இப்போது சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைகதையை எழுதி வருவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த செய்தியை நலன் தரப்பு மறுத்துள்ளது. அவர் எழுதி வரும் திரைப்படம் ஆக்‌ஷன் படமாக இருக்கும் எனவும் அதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்ல்ப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் டிவி போட்ட பக்கா பிளான்.... பிக்பாஸ் 4 போட்டியாளர் லிஸ்ட் ரிலீஸ் - யார் யாருனு பாருங்க!