Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 69 படத்தை இயக்குகிறாரா பிரபுதேவா… தீயாய் பரவும் தகவல்!

vinoth
புதன், 27 மார்ச் 2024 (07:04 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த படத்துக்கான இயக்குனர் பட்டியலில் வெற்றிமாறன், அட்லி, ஹெச் வினோத், திரி விக்ரம் என பலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது திடீரென அந்த பட்டியலில் பிரபுதேவாவின் பெயரும் இணைந்துள்ளது.  பிரபுதேவா ஏற்கனவே விஜய்யை வைத்து போக்கிரி மற்றும் வில்லு ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்த சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

’தேவரா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

‘வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும்’… ஜூனியர் என் டி ஆர் ஆசை!

‘அம்மாவுக்குக் கொடுத்த அன்பை எனக்கும் கொடுங்கள்’… தேவரா மேடையில் ஜான்வி நெகிழ்ச்சி

அடுத்த படம் பேன் இந்தியா லெவலில் ரீச்சாகும்… இயக்குனர் மோகன் ஜி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments