சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயிலர் படத்திற்கு அழைக்கப்பட்ட யூஏ சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு குறித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடத்திற்கு யூஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு யூஏ சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருக்கிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இது பொதுநல வழக்கு அல்ல, விளம்பர நல வழக்கு என நீதிபதிகள் தெரிவித்த நிலையில் மனுவை உடனடியாக வாபஸ் வருமாறு உத்தரவிடப்பட்டது
இதனை அடுத்து மனுதாரர் தனது மதுவை வாபஸ் பெற்றுவிட்டதை அடுத்து அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. பொதுநல வழக்கல்ல விளம்பர நல வழக்கு என நீதிபதிகள் ஜெயிலர் பட வழக்கில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது