Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவியின் சைரன் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!

vinoth
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (13:07 IST)
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவான சைரன் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் எதிர்மறையான கருத்துகளையே பெற்றது.

இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். படத்தால் அவருக்கு சில கோடிகளாவது நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. வரிசையாக ஜெயம் ரவியின் படங்கள் மோசமான வசூலை பெற்று வரும் நிலையில் இந்த படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகியுள்ளது. இன்று தேர்தல் நாளில் படம் வெளியாகியுள்ள பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தாது. வரும் நாட்களில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments