கடந்த சில வாரங்களாகவே பிரபல நடிகை ஜோதிகா சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே
தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் கருத்து கூறியதாகவும், பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அவர் எடுத்த முடிவு போன்ற காரணங்களால் அவரது பெயர் ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது
இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் நடிகை ஜோதிகாவிடம் நீங்கள் ஏன் அரசியலில் ஈடுபடக்கூடாது? சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடாது? என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ஜோதிகா ’அரசியலில் ஈடுபடுவது என்பது சாதாரணமானது அல்ல என்றும் சமூக சேவைகள் செய்த பின்னரே அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் நாங்கள் தேவையான அளவு அரசியலில் ஈடுபடாமலேயே சமூக சேவைகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்
மேலும் இந்த சமூகம் திருந்த வேண்டும் என்றால் ஒவ்வொரு தனிமனிதரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டை வீட்டையும் மனதையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் நாடு முழுவதும் சுத்தமாகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜோதிகாவின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது
செய்திகளில் செய்தியை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்