Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் தேவரா படக்குழுவினரை தேனீக்கள் கொட்டி காயம்!

vinoth
புதன், 8 மே 2024 (15:42 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். முதல் பாகம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள அல்லூரி மாவட்டத்தில் தேவரா ஷூட்டிங் காட்டுப்பகுதிகளில் நடந்துள்ளது. அப்போது திடீரென தேனீக்கள் கூட்டமாக வந்து, படக்குழுவினரைக் கொட்டியுள்ளது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். இந்த ஷூட்டிங்கில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments