தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆரின் 30 ஆவது படமாக உருவாகியுள்ளது தேவரா. இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் இன்று பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகியுள்ளது. படத்துக்கு தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் டிரைலர் கூட ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்த படம் வெளியான நிலையில் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் வசூலில் பட்டையக் கிளப்பியுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 172 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.