இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இயக்கிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் கடந்த மாதம் 11ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென சித்தார்த் நடித்த அருவம் மற்றும் தமன்னா நடித்த பெட்ரோமாக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகிதால் இந்த படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. தமிழகம் முழுவதும் இந்த படத்திற்கு வெறும் 8 தியேட்டர்களில் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக இயக்குனர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். திடீரென தியேட்டர்கள் இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் பின்வாங்கியதை பாரதிராஜா உள்பட தமிழ் திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்தனர்
இந்த நிலையில் ஒரு மாதம் கழித்து தற்போது மீண்டும் இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுமார் 200 பெண் காவலர்கள் இந்த படத்தை பார்க்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று இந்த படத்தை தமிழக செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பார்த்தார். படத்தை பார்த்து படக்குழுவினர்களை பாராட்டிய அவர், படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்காவை தனது வீட்டிற்கு அழைத்து அவரை வெகுவாகப் பாராட்டினார். இந்த சந்திப்பின்போது ஸ்ரீபிரியங்காவின் அப்பா அம்மா உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
போலீஸ் என்றாலே விடுமுறை இல்லாமல் நேரம் காலம் பார்க்காமல் செய்யும் ஒரு பணி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஒரு பணியை ஒரு பெண் செய்து எப்படி சமாளிக்கிறார் என்பதும், அதுவும் பொது இடத்தில் பந்தோபஸ்து போன்ற நேரங்களில் பெண் காவலர்கள் இருக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் இயற்கை உபாதையை கழிக்க என்ன செய்வார்கள் போன்ற நெகிழ்ச்சி தரும் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது