கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி படத்தின் இந்தி ரீமேக் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ல் வெளியான படம் கைதி. தமிழில் மிகப்பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இந்த திரைப்படத்தை வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கைதி 2 படம் எப்போது தொடங்கும் என பலரும் ஆவலாக காத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கைதி படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. அஜய் தேவ்கான் மற்றும் தபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தமிழில் நரேன் நடித்த வேடத்தில் இந்தியில் பெண் போலீஸ் கதாபாத்திரமாக மாற்றி தபு அதில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்துக்கு “BHOLAA” என்று தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தர்மேந்திர சர்மா இயக்குகிறார். தமிழில் தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே இந்த படத்துக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவராக களமிறங்குகிறது.