Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தில் சினிமா? காஜல் அகர்வால் பதில்...

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (18:11 IST)
சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக சமீப காலமாக புகார் எழுந்து வருகிறது. இது குறித்து நடிகை காஜல் அகர்வால் பதில் அளித்துள்ளார். 
 
சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகள் ஆதிக்கம் இருப்பதால், அப்படி இல்லாதவர்களை ஒதுக்கி விடுவார்கள் என்று பேச்சு பரவி வருகிஅர்து. இதுகுறித்து நடிகை காஜல் அகர்வாலிடம் கூறியதாவது, பிறவியிலேயே யாரும் சினிமா நட்சத்திரம் ஆகிவிட முடியாது. வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முதல் வாய்ப்புகள் எளிதாக கிடைக்கலாம். 
 
ஆனால் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். வாரிசு நடிகர்களாக பலர் கஷ்டப்பட்டே முன்னேறி இருக்கிறார்கள். விஜய், சூர்யா, கார்த்தி, தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், நாகசைதன்யா, அல்லு அர்ஜுன், கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் வாரிசுகளாக இருந்தாலும் திறமையாலும் கடினமான உழைப்பாலுமே வளர்ந்துள்ளனர். 
 
இன்னும் சொல்லப்போனால் வாரிசுகளாக இருப்பது பெரிய பாரம். பெரிய நடிகர்கள் மகன்கள் என்பதால் அவர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். வெற்றிக்காக மற்றவர்களை விட அவர்கள் அதிக கஷ்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments