Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குருவும் விருது வாங்கிக் கொடுத்தார் சிஷ்யனும் விருது வாங்கிக் கொடுத்தார்… கலைப்புலி தாணு நெகிழ்ச்சி!

குருவும் விருது வாங்கிக் கொடுத்தார் சிஷ்யனும் விருது வாங்கிக் கொடுத்தார்… கலைப்புலி தாணு நெகிழ்ச்சி!
, செவ்வாய், 23 மார்ச் 2021 (09:04 IST)
அசுரன் படத்துக்கு சிறந்த படம் என்ற பிரிவில் விருது கிடைத்தது பற்றி கலைப்புலி தாணு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்த அசுரன் திரைப்படத்துக்கு 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் தனுஷ். ஏற்கனவே 'ஆடுகளம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார் தனுஷ்.

சிறந்த படத்துக்கான விருது பெற்றுள்ளது குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தாணு ‘முன்பு வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்துக்காக தேசிய விருது வாங்கிக் கொடுத்தார் பாலு மகேந்திரா. இப்போது அவரது சிஷ்யன் வெற்றிமாறன் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுபோன்ற நல்ல நல்ல படங்களை தமிழ் சினிமாக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ‘ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுஷாந்த் சிங்கின் சச்சோர் படத்துக்கு தேசிய விருது அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி!