கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.
இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. இதனால் கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது டிஜிட்டல் வடிவத்தில் மாற்றப்பட்டு 50 நிமிடம் அளவுக்கு எடிட் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.
இதே போல ரஜினிகாந்தின் ஹிட் படங்களில் ஒன்றான 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படமும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸானது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி கமல் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் முத்து திரைப்படத்தை விட ஆளவந்தான் திரைப்படம் இன்றைய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வசூலில் முந்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படமும் ரி ரிலீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.