நடிகர் கமல்ஹாசன் இந்தியன் படத்தின் படப்பிடிப்புக்காக காத்திருந்த நிலையில் இப்போது விக்ரம் படத்தில் முழு மூச்சாக இறங்க உள்ளாராம்.
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் பல ஆண்டுகளாக தொங்கலில் நிற்கிறது. இது சம்மந்தமாக லைகா மற்றும் ஷங்கர் ஆகிய இருவருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அதனால் விரைவில் ஷூட்டிங் செல்ல வாய்ப்பு இருக்குமென நினைத்து விக்ரம் படத்துக்கு செல்லாமல் இருந்தார்.
ஆனால் இப்போது ஷங்கர் தெலுங்கு படத்துக்கு சென்றுவிட்டதால், இப்போதைக்கு இந்தியன் ஷூட்டிங் இருக்காது என்பதால் விக்ரம் படத்துக்கான கெட்டப்புக்கு மாறியுள்ளாராம். விறுவிறுவென விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடிக்க உள்ளாராம்.