Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ்க்கு ஷாக் கொடுத்த கமல்… தெலுங்கு பக்கம் ஒதுங்க யோசனை!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (15:42 IST)
நடிகர் கமல் தான் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு விக்ரம் படத்தில் நடிப்பதாக லோகேஷிடம் கூறியுள்ளாராம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக லோகேஷ் கனகராஜ் ஒரு வருடமாக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியன் 2 பிரச்சனைகள் நீதிமன்றத்தில் முடியும் நிலையில் உள்ளதால் முதலில் அந்த படத்தை முடிக்கும் மன நிலையில் உள்ளாராம் கமல். அதனால் லோகேஷை அதற்குள் வேறு ஏதாவது படங்கள் இருந்தால் முடித்துவிட்டு வந்து விக்ரம் படத்தை தொடங்கலாம் எனக் கூறியுள்ளாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியான லோகேஷும் தெலுங்கு படத்துக்காக ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமா என்ற யோசனையில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments