Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் - எச் வினோத் படம் டிராப்.. என்ன காரணம்?

Siva
புதன், 10 ஜனவரி 2024 (13:52 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத்  இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருந்தது என்பதும் கமல்ஹாசனின் 233 ஆவது படம் என்று அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது டிராப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலஹாசனுக்கு எச் வினோத் போலீஸ் கதை ஒன்றை சொன்னதாகவும் அது போன்ற கதையில் ஏற்கனவே பல படங்கள் நடித்து விட்டதால் மீண்டும் ஒரு போலீஸ் கேரக்டரில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று கமல் கூறியதாகவும் இதனால் கமல் - எச் வினோத் படம் டிராப் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

ALSO READ: இந்திய வரலாற்றில் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி: அம்பானி புகழாரம்
 
இதனை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க எச் வினோத் முடிவு செய்திருப்பதாகவும்  கார்த்தி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
 கமல்ஹாசனின் படத்தை எச் வினோத் இயக்கவில்லை என்றாலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக ஒரு படத்தை அவர் இயக்குவார் என்றும் அந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments